வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:32 IST)

ஒரே வருடத்தில் 5 படங்கள் ரிலீஸ்... அசத்தும் கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த வருடம் மட்டும் 5 படங்கள் ரிலீஸாகின்றன.



 

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவானவர் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்தடுத்து அவர் நடித்த ‘என்னமோ ஏதோ’ மற்றும் ‘வை ராஜா வை’ படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால், கடந்த வருடம் எந்தப் படமும் அவருக்கு ரிலீஸாகவில்லை. ஆனால், இந்த வருடத்தில் இதுவரை 4 படங்கள் ரிலீஸாகிவிட்டன. அடுத்த மாதம் இன்னொரு படம் ரிலீஸாக இருக்கிறது.

‘முத்துராமலிங்கம்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மஹாதேவஹி’ என 4 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இதில் சில படங்கள் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்துள்ளன. அடுத்ததாக, நவம்பர் 24ஆம் தேதி ‘இந்திரஜித்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அவர் மகன் கலாபிரபு இயக்கியுள்ளார்.