செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 மே 2020 (12:09 IST)

விஜய் பட பிகில் பாண்டியம்மாவிற்கு வீடியோ காலில் வாழ்த்து!

பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் தான் இந்திரஜா. இவர் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். மகளின் வெற்றியை கண்டு ரோபோஷங்கர் மனம் நெகிழ்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தற்போது அப்பாவிற்கு இணையாக மகள் பேரும் புகழும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிகில் பாண்டியம்மாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் ரெயில் விட்டுள்ளார் இந்திரஜா. அதில் பிகில் பட நடிகை ஒருவர் வீடியோ காலில் வாழ்த்து கூடியதை ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.