1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 மே 2020 (11:20 IST)

நூடுல்ஸ் மண்ட எங்க..? கருப்பு உடையில் காந்தம் போல் இழுக்கும் ரித்திகா சிங்!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். girl next door போல் curly hair வைத்துக்கொண்டு பெரும்பாலும் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு சிம்பிளாக வந்து ரசிகர்களை வசீகரிப்பார்.

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டு டைம் பாஸ் செய்து வரும் ரித்திகா தற்போது கருப்பு கலரில் லெதர் ஸ்கர்ட் மற்றும் லெதர் ஜாக்கெட் அணிந்துகொண்டிருக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது முடியை straightening செய்திருக்கும் ரித்திகாவிடம் " நூடுல்ஸ் மண்ட தான் அழகா இருக்கு என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் இணையவாசிகள் .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#onlythrowbacksfornow

A post shared by Ritika Singh ♐️ (@ritika_offl) on