1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 அக்டோபர் 2019 (14:40 IST)

பிகிலே!!! டிவிட்டரில் ஆர்பறித்த விஜய்: கொண்டாடும் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்திற்கு டிவிட்டர் எமோஜி வழங்கியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார், ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 
 
மேலும், படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் டிவிட்டர் பிகில் படத்திற்காக எமோஜி வெளியிட்டுள்ளது. இதனை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்களும் டிரெண்டாக்கி வருகின்றனர்.