’பிகில்’ படத்துக்கு திகில் கிளப்பிய அமைச்சர்கள் ...! சோகத்தில் விஜய் ரசிகர்கள் !
விஜய் நடித்துள்ள ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ ஆகிய படங்கள் தீபாவளியின்போது வெளியாக உள்ளன. இந்தப் பண்டிகையின்போது மக்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுப்பது அதிகமாகியுள்ளதால் திரையரங்குகள் இந்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்து லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தன.
ஆனால், சிறப்பு காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் தீபாவளியன்று பிகில், கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிகில் சிறப்புக் காட்சிகள் குறித்த கேள்விகளுக்கு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது :
’சிறப்புக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வாங்குவதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அதனால், பிகில், திகில் யாராக இருந்தாலும் சட்டம் பொதுவானதுதான் ’இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள், அவரது படம் வெளியாகும் நாளில் சிறப்புக் காட்சிகளாக அதிகாலையில் பார்ப்பது வழக்கம். ஆனால் பிகில் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது அனைவராலும் சிந்திக்க வைத்துள்ளது.
இத்தனை நாட்கள் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பிரபல நடிகர்களின் படத்துக்கும் சிறப்புக் காட்சிகள் பார்க்கும் ரசிகர்கள், தாங்கள் அதிக டிக்கெட் விலையைக் கொடுத்துள்ளோம் என்பதுகூட தெரியாமலும் இருக்கிறார்கள்.
இது நடிகர்களை போற்றுகிற ரசிகர்களுக்கு இன்பமாக இருந்தாலும் வெகுஜனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி படம் பார்க்க வரும் சாராரண மக்களின் பொருளாதாரத்துகு முடிவுரை எழுதுவதாகவே இருந்தது.
இந்நிலையில் அமைச்சரின் இந்த முடிவு பாராட்டத்தக்கது. படம் எடுப்பவர்களும், அதை விநியோகிப்பவர்களும், அதை வெளியிடும் திரையங்கு உரிமையாளர்கள் மட்டும் பயனடைந்தால் போதாது. மாறாக அந்தப் படங்களைப் பார்த்து மகிழ்கிற மக்களின் பொருளாதாரத்துக்கு துண்டு விழாமல் இருக்க பார்ப்பதும் அரசின் கடமைதான்.
அந்த வகையில், இந்த டிக்கெட் பிரச்சனையை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டி இருக்கும் ஆளும் அரசின் சாதனை போற்றுதற்குரியதே.
ரசிகர்களும் அதைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்!