வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (17:17 IST)

தமிழக முதல்வரை சந்தித்த பிக்பாஸ் சரவணன்!

தமிழக முதல்வரை சந்தித்த பிக்பாஸ் சரவணன்!
கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்த சரவணன் திடீரென சொந்தப் படம் எடுத்ததால் நஷ்டத்திற்கு ஆளானார். அதன் பிறகு அவர் ஒரு சில ஆண்டுகள் திரை உலகிலிருந்து விலகி இருந்த நிலையில் 2007ஆம் ஆண்டு மீண்டும் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதையடுத்து மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார் 
 
இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் வழங்கினார். பிக்பாஸ் சரவணன் தற்போது இரண்டு படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் மீண்டும் அவர் தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது