திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:17 IST)

‘பிக் பாஸ்’ செட்டில் தீ விபத்து

கன்னட ‘பிக் பாஸ்’ செட்டில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
கன்னடத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான வீடு செட், பெங்களூருவின் பிடாடியில் உள்ள இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்தாலும், அடுத்த பாகத்திற்காக செட்டைப் பிரிக்காமல் அப்படியே விட்டுவைத்துள்ளனர். தமிழிலும் கூட செட் பிரிக்கப்படாமல் அப்படியேதான்  இருக்கிறது.
 
கன்னட பிக் பாஸ் செட்டில், நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்து வந்து தீயை  அணைப்பதற்குள், செட்டில் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன. மேலும், அங்கிருந்த மெழுகு மியூஸியமும் தீயில் உருகி பாழானது. இந்த தீ விபத்தில் பல  லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துவிட்டன, நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.