Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சொன்ன சொல் என்ன ஆச்சு கமல் சார்?


sivalingam| Last Modified புதன், 4 அக்டோபர் 2017 (23:39 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, 'நான் கட்சி ஆரம்பிக்க நேரம் காலம் எல்லாம் பார்த்து கொண்டிருக்க மாட்டேன். இதற்கெல்லாம் ஜோசியம் தேவையில்லை. அவசரப்பட்டு பிறந்த நாளில் மடத்தனமாக கட்சி ஆரம்பிக்கும் வழக்கம் எனக்கு இல்லை


 
 
அது என் பிறந்த நாள். அந்த நாளில் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும். புரட்சி பிறந்த நாள் எதுவோ, அந்த நாளில் கட்சி ஆரம்பிப்போம் என்று கூறினார்.
 
ஆனால் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்கு பின்னர் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த நாள் அன்று கமல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் கமல் சார், நீங்கள் சொன்னது என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகின்றனர். கமல் கூறியபடியே மடத்தனமாக செயல் நடக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :