புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (11:32 IST)

மீம் கிரியேட்டர்ஸை கூவி கூவி அழைத்த ஆண்டவர்! - பிக்பாஸ் 3 ப்ரோமோ வீடியோ !

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய  ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் " கேமரா...பிக்பாஸ் என கூப்பிட அதற்கு பிக்பாஸ் ..யெஸ் ரெடி என சொல்கிறார். பின்னர் மீம் கிரியேட்டர்ஸ்...மீம் கிரியேட்டர்ஸ் என கூவி கூப்பிடுகிறார் கமல். 
1 டே டூ கோ என முடியும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 ( நாளை ) இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள்.