"துப்புசுக்கு துப்புசுக்கு பிக் பாஸ்" பிக் பாஸ் 3க்கு தடையா?

Last Updated: புதன், 19 ஜூன் 2019 (13:33 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 3 வது சீசன் நிகழ்ச்சிக்கு   தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 
 
அந்தவகையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. எப்போதும் போலவே கமல் ஹசான் தான் இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழகங்கவுள்ளார். வருகிற ஜூன் 23ம் தேதி துவங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ விடியோக்கள் அவ்வப்போது வெளியாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச்செய்தது. 
 
இன்னும் நான்கு நாட்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் வேளையில் இந்நிகச்சியை தடை செய்ய கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக் கூடாது என வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மேலும் இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்களை கவருவதற்காக கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளிட்டவற்றை  உபயோகப்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :