ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட கஸ்தூரி கதறி அழுத கவின்?

Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (16:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் கவின் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆதரவாக சாண்டி , தர்ஷன் , முகன் உள்ளிட்டோர் சமாதானம் செய்கின்றனர். 


 
ஆரம்பத்திலிருந்தே கவின், அபிராமி, சாக்ஷி, லொஸ்லியா என ஒருவர் மாற்றி ஒருவரை காதலிப்பதாக கூறி அவர்களுடன் நெருங்கி பழகி வந்தார். இது மக்களை மத்தியிலும் கவினுக்கு வெறுப்பை பெற்று தந்தது. அதைத்தான் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா சொல்லி காண்பித்தார். தற்போது இதனை எண்ணி கவின் கதறி அழும் வீடியோ ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். அதாவது, நான் என்ன சொன்னாலும் அந்த ஒரு விஷயத்தை சொல்லி என்  அடைத்துவிடுகிறார்கள் என் கூறி வருத்தப்படுகிறார். 
 
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, கஸ்தூரியை ஜெயிலில் தூக்கி போட்டுள்ளனர். அவர்  கம்பி எண்ணிக்கொண்டு கதறி அழும் கவினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். 
 


இதில் மேலும் படிக்கவும் :