வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:10 IST)

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் - ஸ்ரீரெட்டி குறித்து பாரதிராஜா

இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை தொடர்ந்து கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி குறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 


 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா “ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது. அதை வைத்து அவர் விளம்பரம் தேடக்கூடாது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?” என கருத்து தெரிவித்தார்.