டைம் என்ன பாஸ்… வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய பாலச்சந்தர் நிறுவனம்!
பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்போது வெப் சீரிஸ் ஒன்றின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் ஒரு காலத்தில் பிஸியான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ரஜினியை வைத்து பல படங்களை தயாரித்தது. கடைசியாக ரஜினி நடித்த குசேலன் படம் கூட அந்நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆனால் அதன் பின் ஏனோ சினிமா தயாரிப்பைக் கைவிட்டது. இடையில் பாலச்சந்தரும் மரணமடைய, இப்போது அந்த நிறுவனம் தூசு தட்டப்பட்டுள்ளது.
புதிதாக அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டைம் என்ன பாஸ் என்ற சீரிஸில் பரத், ப்ரியா பவானி சங்கர் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதையடுத்து இனிமேல் தொடர்ச்சியாக தயாரிப்பில் இறங்கும் என சொல்லப்படுகிறது,