திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (16:04 IST)

வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு பதில் புது ஹீரோயின்!

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் விளக்கக் கடிதம் வெளியானது. அதன்பின்னர் இயக்குனர் பாலா கதையில் சில மாற்றங்களை செய்து அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் வணங்கான் படத்தை தொடர உள்ளதாக சொலல்ப்பட்டது. இந்நிலையில் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் இப்போது மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இந்நிலையில் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட க்ரீத்தி ஷெட்டிக்குப் பதில் கதாநாயகியாக ரோஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ஜடா மற்றும் ஏமாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.