செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (15:34 IST)

மக்களவை தேர்தல் வெற்றிக்கான தொடக்கம் இது: அமைச்சர் செந்தில் பாலாஜி

senthil
ஈரோடு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தொடக்கம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வெற்றியின் தொடக்கம் என்று தெரிவித்தார். 
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 49ிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மணிமகுடம் தான் இந்த தீர்ப்பு என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran