திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:16 IST)

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் அட்லி மனைவி கர்ப்பம்: குவியும் வாழ்த்துக்கள்

atlee priya1
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் அட்லி மனைவி கர்ப்பம்: குவியும் வாழ்த்துக்கள்
பிரபல இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி என்பதும் அவர் தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்துவரும் என்ற ’ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரியா என்பவரை அட்லி திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
 
மேலும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்ட நிலையில் அட்லி மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran