திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:33 IST)

சேதமடைந்த மாற்றுத்திறனாளின் சிறப்பு பாதை சீர் செய்யப்படும்: மேயர் பிரியா

chennai mayor priya
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட்டது என்பதும், இந்த  சிறப்பு பாதையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த சிறப்பு பாதையில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி வேறு சிலரும் சென்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடும் புயல் காற்று வீசுவதாலும் கனமழை பெய்து வருவதாலும் இந்த மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதமடைந்தது.
 
இந்த  நிலையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மெரினாவின் மாற்றுத்திறனாளி சிறப்பு பாதை விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran