திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (07:53 IST)

கமலின் குருதிப் புனல் டைட்டிலில் அசோக் செல்வன் நடிக்கும் வெப் சீரிஸ்!

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஷோ ரன்னராக கேங்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்து மேற்பார்வையிடுகிறார். இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கு கேங்ஸ் குருதிப்புனல் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை அமேசான் ப்ரைம் வீடியோ ஒளிபரப்ப உள்ளது.

இந்த தொடரில் அசோக் செல்வனோடு சத்யராஜ், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா உள்ளிட்டோர் நடிக்க, தொடரை நோவா இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியிலான கேங்ஸ்டர் கதையாக இந்த தொடர் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.