வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:36 IST)

அருண் விஜய் நடிப்பில்,“ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
இவ் விழாவில் 
தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது..
 
இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதைச் செய்துள்ளார். 
 
சாம் சி எஸ் இசைப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின், அவர்த் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார். 
 
அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம், இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.
 
ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். நான் ஒரு தமிழ் அமெரிக்கன், ஏன் அமெரிக்கர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட் எப்படிப் பெஸ்ட் கொடுக்கிறார்கள் அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். 
 
எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம்.
 
நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன்.பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்தக்கம்பெனி. இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.
 
இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
 
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
 
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
 
திருக்குமரன் சார், பாபி சார், மனோஜ் சார் அனைவருக்கும் நன்றி. என்னை இந்தப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அருண்விஜய் சாரை ரொம்ப காலமாகத் தெரியும், பல நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. பிட்னெஸாக உடம்பை வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம் எனத் தெரியும். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் குவியும். என் படக்குழுவினருக்கும் மீடியாவிற்கும் என் நன்றிகள்.
 
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
 
சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது. தயாரிப்பாளர்ப் பாபி சின்ன சின்ன விசயங்களுக்கும் எனக்குக் கால் செய்வார், தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப்பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும். ஒரு படம் ஹிட்டாகக் கதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிடிவிட்டி இருந்தாலே அந்தப்படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள். சாம் சி எஸ் என்றாலே பின்னணி இசையில் மிரட்டுவார் என்பார்கள் அதற்காக நான் பாடல்கள் நன்றாகச் செய்ய மாட்டேன் என அர்த்தம் இல்லை. நான் ஒவ்வொரு வருடமும் நல்ல பாடல்கள் தந்து வருகிறேன். இந்தப்படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும். இயக்குநர் ஒவ்வொரு பாடலின் போதும் தரும் பாராட்டுக்கள் எனக்குப் பெரும் ஊக்கம் தரும். இந்தக்கம்பெனிக்கு யார்ப் படம் செய்தாலும் ஹிட் படமாகத்தான் இருக்கும் இவர்களிடம் அத்தனைத் திட்டமிடல் இருக்கிறது. அருண் விஜய் சார் மிகப்பெரிய உழைப்பாளி, எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார். அவருடன் வேலைப் பார்ப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.
 
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
 
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.