புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (20:00 IST)

கமல் பிரம்மித்த அமீரின் "அச்சமில்லை அச்சமில்லை" டீசர் !

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசரை சற்றுமுன் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
 

 
அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ள படம் "அச்சமில்லை அச்சமில்லை". இப்படத்தை அமீரின் உதவி இயக்குனர் முத்துகோபால் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிஷ், சாந்தினி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை அமீரின் தயாரிப்பு நிறுவனமான டீம் வொர்க் புரோடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு அருண்குமார் இசையமைக்க,  விவுரி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
விவசாயிகளின் பிரச்னை, மணல் கொள்ளை, டாஸ்மாக் என பல பிரச்னைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் அரசியல் பிரமுகராக நடித்துள்ளார்.   ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். 
 
மேலும் இந்த டீசரை கமல் ஹாசன் “அச்சமில்லை அச்சமில்லை படம் எடுக்கவே துணிச்சல் வேண்டும்” என்று கூறி வெகுவாக பாராட்டியுள்ள  பேட்டியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.