ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்து! – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் டெர்மினேட்டர், ப்ரிடேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து உலக புகழ் பெற்றவர் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இவர் நடித்த டெர்மினேட்டர் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் மேயராகவும் இருந்த அர்னால்ட் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் பிரதான சாலை ஒன்றில் அர்னால்ட் காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற கார்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதின. இதனால் நிலைதடுமாறிய அர்னால்டின் காரும் முன்னால் சென்ற காரின் மீது மோதியது. பின்னால் வந்த கார் ஒன்று அர்னால்ட் கார் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் அர்னால்ட் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பியுள்ளார். இந்த சம்பவம் அர்னால்ட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.