வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (22:36 IST)

அரவிந்தசாமிக்கு ஜோடியான ஜோதிகா

மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முதல்கட்ட புரமோஷனில் முதலில் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜோதிகா கேரக்டர்கள் குறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளியானது.
 
அதேபோல் சிம்புவுக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளதாகவும் இருவரும் வரதன் மற்றும் சித்ரா கேரக்டர்களில் நடித்துள்ளதாகவும் சற்றுமுன் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.
 
இனி தெரிய வேண்டியது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்பதுதான். அனேகமாக அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிதி ஹைத்ரி யாருக்கு ஜோடி என்ற சஸ்பென்ஸ் விரைவில் தெரியும் என கருதப்படுகிறது
 
செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.