செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:50 IST)

சார்பட்டா வெற்றியின் பலனை அனுபவிக்கும் சுந்தர் சி… அரண்மனை 3 இத்தனைக் கோடி வியாபாரமா?

அரண்மனை 3 ஆயுதபூஜை நாளில் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது அதன் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ’அரண்மனை 3’திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகை குஷ்பூ நேற்று தனது ட்விட்டர் வாயிலாக உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம்தான் அனைவரையும் ஆச்சர்யப் படவைத்துள்ளது. 33 கோடி ரூபாய்க்கு இந்த படம் மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இது இதுவரை ஆர்யா படத்துக்கு இல்லாத வியாபாரம். பிரம்மாண்ட வியாபாரத்துக்கு சார்பட்டா பரம்பரை வெற்றிதான் காரணம் என சொல்லப்படுகிறது.