1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (14:22 IST)

நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் -ARRPD6 படப்பிடிப்பு துவங்கியது!

AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார்.
 
படத்திற்கான முன்னோட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர் படக்குழுவினர், இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
 
மிகவும் எதிர்பார்க்கப்படும் AR ரஹ்மானின் கலக்கலான பாடல்கள் இசையமைக்கப் பட்டு வருகின்றன. 
 
யோகி பாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்த கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளன.
 
AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார்.
 
இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் Promo விரைவில் வெளியாக உள்ளது.
 
25 ஆண்டுகளுக்கு பிறகு AR ரஹ்மானும், பிரபு தேவாவும் இணைந்துள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
 
திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தரமான, நகைச்சுவை காட்சிகள் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அடுத்த ஆண்டில் 2025-ல் பான்-இந்திய படமாக திரைக்கு வர உள்ளது.