புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (14:04 IST)

பலரது கனவுகளை நனவாக்கும் நான் முதல்வன் திட்டம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!

stalin
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டு இளைஞர்களைக் கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க வைக்க தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் இத்திட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை குறிப்பிட்டு தனது எக்ஸ்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.