Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முன்ஜாமீன் கோரி அன்பு செழியன் மனு....

Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (15:43 IST)
தலைமறைவாக உள்ள பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


 
நடிகர், இயக்குனர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச்செழியனை பிடிக்க போலீஸார் பல்வேறு விதங்களில் தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அன்புச்செழியனின் நெருங்கிய நண்பரும் அவருடைய மேனேஜருமான முத்துக்குமார் என்பவர் நேற்ரு போலீசாரிடம் சிக்கினார்.
 
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள அவருடைய கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் அவரை பிடித்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். அன்புச்செழியன் எங்கே இருக்கின்றார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் முதல்கட்டமாக அன்புச்செழியன் மற்றும் முத்துக்குமார் இருவரும் சமீபத்தில் ஐதராபாத் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஐதராபாத்தில் இருந்து அன்புச்செழியன் எங்கே சென்றார் என்பது குறித்து முத்துக்குமாரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அன்புச்செழியன் பிடிபடுவார் என்றும் நேற்று செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், நேற்று மாலை அன்புச்செழியன் சார்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :