செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:20 IST)

அஞ்சலிக்கா இந்த கேரக்டர்: வாய் பிளக்கும் திரையுலகம்!!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். 
 
நடிகை அஞ்சலி மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ‘ரோசாப்பூ’ என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. 
 
வினு ஜோசப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார். பிஜு மேனன், நீரஜ் மாதவ், அஞ்சலி, சௌபின் ஷாகிர், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 
 
இந்நிலையில், இந்த படத்தில் அஞ்சலி விபச்சாரி கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது வெளியான படத்தின் டிரைலர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.