செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:47 IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷால் அஞ்சலி - இன்று வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.


 
ஏற்கனவே அதிமுக, திமுக, தினகரன் என பலத்த போட்டி நிலவும் ஆர்.கே.நகர் தொகுதியில் திடீரென, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடிகர் விஷால் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
 
இன்று கடைசி நாள் என்பதால், விஷால் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இன்று காலையில், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீட்டிற்கு வந்த அவர் அங்கு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால் நான் அரசியல்வாதி அல்ல. சாதாரண மக்கள் பிரதிநிதியாகவே போட்டியிடுகிறேன்.  என் பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. யாரிடமும் நான் ஆதரவு கேட்கவில்லை. மக்களின் தைரியத்தை நம்பியே போட்டியிடுகிறேன். சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. அதை பெற்றுத்தரவே நான் போட்டியிடுகிறேன். ய” என அவர் தெரிவித்தார்.
 
அதன் பின் அவர் மறைந்த முதல்வர் ஜெ.வின் சமாதிக்கு சென்று வணங்கிவிட்டு, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது.