1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (18:04 IST)

தனுஷுக்கு வில்லனாலாகும் ஹீரோ நடிகர்!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் நவின் சந்திரா நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. 
 

 
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் கொடி படம் புகழ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.
 
துரை செந்தில்குமார், தனுஷ் இரண்டாவது முறையாக சேரும் இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகா  நடிக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். 
 
நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து தற்போது  இந்தப் படத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தின் ஹீரோ நவீன் சந்திரா தனுஷிற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிரம்மன் படத்தில் சிவக்குமாருக்கு நண்பராக நடித்தவர். மேலும், அவர் சில தெலுங்கு படங்களிலும்  நடித்துள்ளார்.
 

 
இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.