புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (08:47 IST)

விஜய் ஒன்னும் அவ்வளவு நல்ல நடிகரில்லையே!! இயக்குனர் காட்டம்

நடிகர் விஜய் தேவரகொண்டா ஒன்னும் அவ்வளவு நல்ல நடிகரல்ல என இயக்குனர் பன்டி சரோஜ் குமார் கூறியுள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவர் நடிப்பில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் ஹிட் ஆனது. 
 
இதையடுத்து இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான 'நோட்டா' தமிழகத்தில் பயங்கர ஃப்லாப் ஆனது. அடுத்ததாக அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தமிழில் போர்க்களம் படத்தை இயக்கிய பன்டி சரோஜ் குமார், விஜய் தேவரகொண்டா குறித்து பேசுகையில், அவர் ஒரு மனிதன், அவ்வளவு தானே தவிர அவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நல்ல நடிகரெல்லாம், கிடையாது என கூறினார்.  எல்லோருக்கு எல்லாறையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா!! அவருக்கு விஜய் மீது என்ன பகை என்று தெரியவில்லை.