Widgets Magazine

விஜய் அண்ணா வந்தவுடன் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும்: நெகழும் கதிர்

VM| Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:04 IST)
பரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான நடிகர் கதிர் தளபதி வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும்  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


 
பொதுவாக இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் உடன் நடிப்பது என்பது பெரும் கனவு. அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கதிர்.
 
அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், " தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். அவரது மிக தீவிரமான ரசிகன் நான். விஜய் அண்ணா என்னை படப்பிடிப்பின் போது உரிமையுடன் பாசமாக தம்பி என அழைப்பார். அவர் படப்பிடிப்புக்கு வந்தவுடன் உடலில் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும். முன்பு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையான தோற்றத்தில் அழகாக இருக்கிறார் விஜய் அண்ணா" என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :