ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:29 IST)

போலி முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரம் – அமலாபால் மேல் நடவடிக்கை ?

போலியான முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டும் பென்ஸ் எஸ் ரக கார் ஒன்றை 1.12 கோடி ரூபாய்க்கு வாங்கிய நடிகை அமலாபால் அதனை வரி ஏய்ப்புக்காக போலியான முகவரியில் பதிவு செய்தார். அதாவது தன்னுடைய கேரள முகவரியில் பதிவு செய்தால் 20 லட்சத்துக்கும் மேல் வரிகட்ட வேண்டும் என்பதால் புதுச்சேரியில் போலியான ஒரு முகவரி கொடுத்து 1.7 லட்சம் மட்டுமே வரிக் கட்டினார்.

ஆனால் அமலாபால் கொடுத்த முகவரியில் வேறொரு நபர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அமலாபால் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இரண்டு வருடங்களாக நடந்துவரும் நிலையில் கேரள மாநில போக்குவரத்து ஆணையர், புதுச்சேரி சட்டத் துறைக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு விரைவாக முடிந்து அமலாபால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.