ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (23:00 IST)

அமலாபால் துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள்: விஷால்

நடிகை அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் நடிகைகள் யாரும் நடிக்க தயங்கும் நிர்வாண காட்சியில் நடிகை அமலாபால் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாதியில் சுமார் 40 நிமிடங்கள் நிர்வாண காட்சி இருந்தாலும் அருவருப்பான, ஆபாசம் இன்றி இந்த படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டதற்கு படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த கேரக்டரில் அமலாபாலை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்றே பலரது கருத்தாக உள்ளது. இந்த ஒரே படத்தின் மூலம் அமலாபால், புகழின் உச்சிக்கு சென்றுவிட்டதாகவே கருதப்படுகிறது
 
இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்தது மட்டுமின்றி வசூலிலும் இந்தப்படம் வெற்றிகரமாக வசூல் செய்ததாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அமலாபால் இந்த படத்தில் தனது கேரக்டரில் துணிச்சலாக நடித்ததாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன
 
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமலாபாலுக்கு எனது வாழ்த்துக்கள் ஒரு துணிச்சலான கேரக்டரை ஏற்று நடித்துள்ள அமலாபால் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆடை படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த நடிகை அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார்