செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:28 IST)

போலி முகவரியில் பென்ஸ் கார்: நடிகை அமலாபால் மீது திடுக்கிடும் புகார்

இயக்குனர் விஜய்யிடம் இருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.



 
 
இந்த நிலையில் அவர் சமீபத்தில் ரூ.1.12 கோடி மதிப்பில் எஸ் கிளாஸ் பென்ஸ் கார் வாங்கியதாகவும், இந்த காருக்காக அவர் போலி முகவரி கொடுத்து வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
புதுச்சேரியில் உள்ள போலி முகவரியில் அவர் கார் வாங்கியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கூ"றுகின்றன.