கட்டான உடல் தோற்றத்திற்கு டிப்ஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்

Last Modified சனி, 3 நவம்பர் 2018 (15:51 IST)
இந்த வயதிலும் அக்‌ஷய் குமார் எவ்வாறு நல்ல உடல் திறனோடு இருக்கிறார் என்று நடிகர் விஷால்  2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் வீடியோ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய அக்‌ஷய் குமார்,  நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். ஒரு நாளும் சூரியோதயத்தை பார்க்கத் தவறியது இல்லை. என் வீட்டிலேயே ஜிம் வைத்துள்ளேன். மேலும்,  தனது தந்தை ராணுவத்தை சேர்ந்தவர் என்பதால், சிறுவயது முதலே உடல் நலனில் அக்கறைக் காட்டி வந்ததாகவும், தன்னை பொறுத்தவரை உடல் என்பது கோயில் என அக்ஷய் குமார் கூறினார். 
  
பிறகு, விஷால் குறித்து பேசிய அவர், நடிகர் விஷால் அரிசி உணவுகளை அதிகம் தவிர்த்து வருகிறார். அதுகுறித்து அவரது தாயார் கவலை அடைவதாக பேட்டியில் படித்தேன். தாயின் பேச்சுக்கு இணங்க வாரத்தில் இருமுறையாவது, விஷால் அரசி உணவுகளை சாப்பிட நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :