செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (15:31 IST)

2.0 டிரைலர் விழாவில் தமிழில் பேச 3 மணிநேரம் பயிற்சி எடுத்த அக்ஷய்குமார்

’2.0’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்காக அவர் 3 மணிநேரம் பயிற்சி எடுத்தாராம்.
 


ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டிரெய்லர் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
அப்போது பேசிய அக்‌ஷய் குமார், சில வார்த்தைகளை தமிழில் பேசப்போவதாகவும், அதற்காக மூன்று மணிநேரம் தான் பயிற்சி செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பிறகு அவர் பேசும் போது, ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், நீரவ் ஷா போன்ற ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று தமிழில் பேசினார். 
 
வணக்கம் சென்னை, மகிழ்ச்சி, ரஜினி, சங்கர் மற்றும் மகான் ரஹ்மான் உடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. உங்கள் எல்லோரின் அன்பிற்கும் நன்றி என அக்ஷய்குமார்  கூறினார்.
 
நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்த பேச்சு, விழா அரங்கிலிருந்த பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது. அப்போது குறுக்கிட்ட விழா தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜி, இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையில் (Statue of Unity) இடம்பெற்றிருந்த தமிழை விட அக்ஷய்குமார் தமிழ் நன்றாக இருந்தது என புகழாரம் சூட்டினார். 
 
இங்கு பேசுவதற்காக 2,3 மணிநேரம் பயிற்சி எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார் .