நான் இந்திய குடிமகன் இல்லையா? ஆவேசம் அடைந்த ரஜினி பட நடிகர்!
சமீபத்தில் பிரதமர் மோடியை நடிகர் அக்சயகுமார் பேட்டி எடுத்திருந்தார். அரசியல் இல்லாமல் பிரதமர் மோடியிடம் வித்தியாசமான கேள்விகளால் பேட்டியெடுத்த அக்சயகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும் எதிர்க்கட்சிகள் அவர் மீது கடுப்படைந்தன. இதனையடுத்து அக்சயகுமார் இந்தியரே இல்லை, அவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்த நிலையில் இதுகுறித்து அக்சயகுமார் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:
என்னுடைய குடியுரிமை குறித்து கடந்த சில நாட்களாக தேவையற்ற கருத்துக்களும், எதிர்மறை கருத்துக்களும் பரவி வருகிறது. இந்த விஷயம் எனக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை. நான் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பதை என்றுமே மறைத்ததும் இல்லை மறுத்ததும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நான் கனடாவுக்கு சென்றதும் இல்லை. இதுதான் உண்மை. ஒரு இந்தியர் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது சட்டப்படி எந்தவித தவறும் இல்லை
நான் இந்தியாவில் தான் பணி புரிகிறேன். என்னுடைய வருமானத்திற்கு ஏற்ற வரியை இந்தியாவில்தான் செலுத்துகிறேன். நான் என்றும் இந்தியாவுக்கு தேசப்பற்றுடன் தான் இருக்கின்றேன். இதனை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசியல் காரணங்களுக்காக என்னுடைய குடியுரிமை பிரச்சினை குறித்து தேவையற்ற சர்ச்சையில் யாரும் ஈடுபட வேண்டாம். எனது தனிப்பட்ட, சட்ட, அரசியல் அல்லாத, மற்றவர்கள் விரும்பும் வகையில் எனது வழியில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய விரும்புகிறேன், இந்தியா மென்மேலும் வலுவடைவதையே நான் விரும்புகிறேன்'
இவ்வாறு அக்சயகுமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.