எனக்கு திருமணம் செய்து வையுங்கள்: போலீசில் புகார் அளித்த 2 அடி 3 அங்குல வாலிபர்!

Last Modified வெள்ளி, 3 மே 2019 (18:41 IST)
எனக்கு என்னுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க மறுப்பதால் நீங்கள் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று 2 அடி 3 அங்குல உயரமுள்ள 26 வயது வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் வினோத புகார் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 வயதான அசிம் மன்சூரி என்பவர் 2 அடி 3 அங்குலமே இருந்ததால் அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. மேலும் அவருடைய உயரத்திற்கு தகுந்த பெண் கிடைப்பதும் மிகவும் அரிதாக இருந்தது.

இந்த நிலையில் தனக்கு ஏற்ற வகையில் மணப்பெண் ஒருவரை தேடி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அசிம் மன்சூரி காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அசிமின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் இன்னும் இரண்டு மாதங்களில் அசிமுக்கு திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினர். அவ்வாறு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றே தாங்களே ஒரு தகுந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் அசிமுக்கு காவல்துறையினர் உறுதியளித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :