வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (17:49 IST)

அஜித்தின் ’சூப்பர் ஹிட் படம்’ இந்தியில் ரீமேக் : ஹீரோ யார் தெரியுமா ?

தமிழ்சினிமாவில்  உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது ஆஸ்தான இயக்குநர் சிவா. வேதாளம், வீரம் விவேகம்,விஸ்வாசம் ஆகிய ’வி ’வரிசைப் படங்கள் ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அஜித் வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் , சிவா இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற வேதாளம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்தி ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜான் ஆப்பிரகாம் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 
 
ஏற்கனவே இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாகவும், அதில் பவன் கல்யாண் ஹீரோவாகவும் நடிபதாகவும், அப்படத்தை நேசன் இயக்குவதாகவும் இருந்தது. ஆனால் பவன் கல்யான் அரசியலில் இறங்கியதால் அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.