திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (11:47 IST)

விஸ்வாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலைபார்த்த அஜித்..! எந்த காட்சிக்கு தெரியுமா..?

பொங்கல் விருந்தாக சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது விஸ்வாசம்.  இப்படம் தற்போதுவரை  ரூ. 100 கோடிக்கும் மேல்  வசூல் செய்து  தியேட்டர்களில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. 


 
இபடத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடிக்க ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் காமெடி காட்சிகளில் கலக்கினர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டது. 
 
கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தை இமான் இசையமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது . 
 
இந்நிலையில் தல அஜித் விசுவாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே தனக்கான போஷன் முடிந்ததும், ஒளிப்பதிவாளராகவும் இப்படத்தில் பணியாற்றினாராம்.  தல அஜித் நடிப்பையும் தாண்டி கார் மற்றும் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது நாம் அறிந்தவையே, அதே போல் கேமரா பிரியரும் கூட.
 
விஸ்வாசம் படத்தில் வரும் டாப் அங்கிள் காட்சிகளை ஹெலிகேம் உபயோகப்படுத்தி, தனது அற்புதமான திறமையை வெளிக்காட்டியுள்ளார் அஜித். அவருடன் சேர்ந்து தல அஜித் ஹெலிகேம் உபயோகிப்பது போன்ற பிரத்தியேக புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், டிரைலரில் வரும் ஏரியல் வியூ காட்சிகள் கூட தல அஜித் எடுத்தது தான் என்ற செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது.