Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தல அஜித்தின் இமாலய சாதனை: மகிழ்ச்சியில் ரசிகர்கள்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (11:19 IST)
ட்விட்டரில் முதல் முறையாக 30,000 ரீ ட்வீட்டுகளை தாண்டிய பர்ஸ்ட் லுக் விவேகம் என்ற பெருமையை தல அஜித் பெற்றுள்ளார். 

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாக இருக்கும் விவேகம் படம் அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் இந்த படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார். விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
அனைவரும் அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து வியந்து பாராட்டி தள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டரில் அதிகம் பேர் ரீ ட்வீட் செய்த பர்ஸ்ட் லுக் என்ற சாதனையை படைத்துள்ளது விவேகம். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரீ ட்வீட் செய்தவர்களின் எண்ணிக்கை 30,000 எட்டியுள்ளது. 
 
இதன்மூலம் முதல் முறையாக 30,000 ரீ ட்வீட்டுகளை தாண்டிய பர்ஸ்ட் லுக் விவேகம் என்ற பெருமையை தல அஜித் பெற்றுள்ளார். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் அஜித் ரசிகர்கள்தான். தற்போது அஜித் ரசிகர்கள் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :