அஜித்தின் ‘விசுவாசம்’ : புதிய அப்டேட் இதோ...

CM| Last Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:33 IST)
அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘விசுவாசம்’ படத்தைப் பற்றி புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் ‘விசுவாசம்’. ‘விவேகம்’  படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார்  அனிருத்.
 
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ‘விசுவாசம்’. ஆனால், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதுமட்டுமல்ல, ஹீரோயின் உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ‘விசுவாசம்’ படத்தின் கதை எங்கு நிகழ்கிறது எனத் தெரியவந்துள்ளது.  வடசென்னையை மையப்படுத்தித்தான் கதை எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :