1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (18:08 IST)

கும்பகோணம் ரோட்டு கடையில் சாதாரணமாக அமர்ந்து சாப்பிடும் தல அஜித்!

தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்பட்ட அஜித் பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து தன் வெற்றியை நிலைநாட்டினார். நடிப்பதுடன் நிறுத்தி விடாமல், பைக் ரேஸ் , கார் ரேஸ், போட்டோ கிராபர், துப்பாக்கி சுடுதல் என பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து தனது திறமைகளை வளர்ந்து வருகிறார்.


பல வருடங்களாக படத்தில் நடிப்பதோடு சரி எந்த ஒரு பொது மேடைகளிலும் பங்கேற்பதில்லை. இதனாலே இவரை வெளி இடங்களில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் பரவசப்பட்டு அதை தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவிற்கு வைரலாக்குவார்கள். அந்தவகையில் தற்ப்போது அஜித் பைக் ரேஸ் உடையில் கும்பகோணம் ரோட்டு கடை டீ  ஸ்டாலில் சாதாரணமாக அமர்ந்து போன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.