1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:02 IST)

ஹீரோவாகிறார் முகின் ராவ் - முக்கிய ரோலில் ஷிவானி!

பிக்பாஸ் முகின் ராவ் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து பெரிய நடிகர்களுக்கு சமமாக பிரபலமானார்.

இந்நிலையில் தற்ப்போது ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் புதிய படத்தில் முகின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகினுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இவர்களுடன் சீரியல் நடிகை ஷிவானி ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.