கன்னடத்தில் கால் பதித்த அஜித்!!
அஜித் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றாக கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
விஜய் மலையாளத்திலும், சூர்யா, கார்த்தி, விஜய் ஆண்டனி போன்றவர்கள் தெலுங்கிலும் கவனம் செலுத்த… சத்தமில்லாமல் கன்னடத்தில் கால் பதித்து வருகிறார் அஜித்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ‘என்னை அறிந்தால்’, சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்பட்டது.
அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘ஆரம்பம்’ படத்தையும் கன்னடத்தில் டப் செய்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கிய இந்தப் படத்தில், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்திருந்தனர்.