வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (08:35 IST)

’துணிவு’ படத்தின் ‘காசே தான் கடவுளடா’ பாடல்: ரிலீஸ் தேதியை அறிவித்த போனிகபூர்

thunivu
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காசேதான் கடவுளடா என்ற பாடல் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ’துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு காசேதான் கடவுளடா என்ற பாடல் வெளியாகும் என அறிவித்து அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
’துணிவு’ படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அஜித், மஞ்சுவாரியர், அமீர், பாவனி, சிபி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva