புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (06:28 IST)

அஜித்தை சமாதானப்படுத்த ரஜினி முடிவா? ஒரு ஆச்சரிய தகவல்

அஜித்தை சமாதானப்படுத்த ரஜினி முடிவா? ஒரு ஆச்சரிய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மட்டும் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் முடிந்தபாடில்லை. இனிமேலும் இருதரப்பு ரசிகர்களும் சமாதானம் ஆவார்களா? என்பது சந்தேகமே. ரஜினி என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களை பகைத்து கொண்டால் ரஜினியின் டேமேஜ் ஆவதை தடுக்க முடியாது என்பதே உண்மையான நிலவரம்
 
இந்த நிலையில் அஜித்தையும் அஜித் ரசிகர்களின் சமாதானப்படுத்த அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக ரஜினி தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாலும், அஜித்தின் மிக நெருக்கமான சிறுத்தை சிவா தான் ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் என்பதாலும் இந்த அற்புதம், அதிசயம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
 
ரஜினி, அஜீத் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்பதால் இந்த படம் ஒரு செய்தி உறுதி செய்யப்பட்டால் தமிழ் திரையுலகில் இது ஒரு ஆச்சரியமான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரஜினி விரைவில் கட்சி ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களுடனான மோதலை அவர் விரும்பவில்லை என்றும் அஜித் ரசிகர்களை தனது பக்கம் இழுக்கும் ஒரு தந்திரம் தான் இது என்றும் கூறப்படுகிறது