செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:16 IST)

அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு...!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
இருந்தாலும் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அஜித் அந்த போஷனை முடித்து கொடுத்ததாக தகவல்கள் கூறப்பட்டது. வருகிற தீபாவளிக்கு தினத்தில் ரிலீஸ் ஆகவிருப்பதால் படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை  ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினியின் காலா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சற்றுமுன் வலிமை படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருப்பது யோகி பாபு தான். ரஜினி,  விஜய் என டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளார். இவர் அஜித்துடன் நடித்த வேதாளம் , வீரம் , விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் வலிமை படத்தில் இணைந்திருப்பது தல ரசிகர்களை திருப்தி அடைய வைத்துள்ளது.