'விஐபி 2' பட விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் மிஸ்ஸிங் ஏன்?


sivalingam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (22:40 IST)
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள 'விஐபி 2' திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை. 


 
 
செளந்தர்யா, ஐஸ்வர்யா இடையே பிரச்சனையா? அல்லது தனுஷூக்கு ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழ, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செளந்தர்யா ரஜினி விளக்கம் அளித்தார்
 
எங்களுடைய ஒவ்வொரு பணியையும் அக்கா கவனித்து கொண்டுதான் இருக்கின்றார். அவர் எங்களை வாழ்த்தி அனுப்புவதால் தான் எங்களால் எனர்ஜியாக பணிபுரிய முடிகிறாது. அவர் தற்போது இரண்டு படங்களின் திரைக்கதைய்யில் பிசியாக இருக்கின்றார். எனவே தான் அவரால் விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை. அதைத்தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை' என்று கூறினார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :