வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (16:50 IST)

உதயநிதிக்கு ஜோடியாகும் அதிதிராவ்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது.



மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் 'காற்று வெளியிடை' மூலம் கவனம் ஈர்த்த அதிதி ராவ் ஹீரோயினாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் இயக்குநர் ராம் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே மிஷ்கின் தம்பி ஜீ.ஆர்.ஆதித்தியா இயக்கத்தில் வெளியான சவரக்கத்தி படத்தில் இயக்குநர் ராம் ஹீரோவாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடித்திருந்தனர்.